சனி, 23 பிப்ரவரி, 2013

நரேந்திர(பலி)மோடின் அடிவருடிகளுக்கு செருப்படி கொடுக்கும் திரு. கட்சு





”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!


செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, February 21, 2013, 20:24


“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்:

இதில் இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுருத்தி காட்டியுள்ளார் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள்.

http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece

அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் .

அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி. அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்பதை போன்ற ஒரு தோற்றத்தில் இன்றைக்கு மோடியை இந்திய மக்களில் ஒரு பெரும்பான்மையான கூட்டம் சித்தரிகின்றது.
இதனை ஏதோ கும்ப மேளாவின் போது வெறும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாத்திரம் கூறவில்லை , இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பகுதியான “கல்வி அறிவு பெற்றவர்கள் (?)” என்ற பெயரால் அழைக்கபடுபவர்களும் , “கல்வி அறிவு (?)” உள்ள இளைஞர்களும் கூட நரேந்திர மோடி அவர்களின் பிரச்சாரத்தில் திசை திருப்ப பட்டு இவ்வாறு கூறுகின்றனர் .

ஒரு சில தினங்களுக்கு முன்பு நான் டில்லியில் இருந்து போபாளிற்கு விமானம் மூலம் பயணித்தேன் . எனக்கு அருகில் அமர்ந்திருதவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர். நான் அவரிடத்தில் மோடி அவர்களை குறித்து கருத்து கேட்டேன் . மோடியை பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேச்சின் இடையில் நான் குறுக்கிட்டு ,சில கேள்விகளை முன் வைத்தேன் . நான் அவரிடத்தில் 2002 குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை பற்றி கேட்டேன் . முஸ்லிம்கள் எப்போதும் குஜராத் மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்கி கொண்டே இருந்தனர் , ஆனால் 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க பட்டுள்ளனர் , இதற்க்கு பின்னரே குஜராத் மாநிலத்தில் அமைதியான சூழல் குடிகொண்டது என்று பதில் அளித்தார். அது மயானத்தில் நிலவும் அமைதிக்கு ஒப்பானது. அமைதியுடன் நீதியும் ஒன்று சேராத வரை , என்றைக்கும் அமைதி மாத்திரம் தனித்து நீடித்து நிலைத்துவிட முடியாது .இதை நான் கூறிமுடித்தது தான் தாமதம் , அவர் என்னிடத்தில் கோபித்தவராக என்னிடமிருந்து விலகி சென்று மற்ற்றொரு இருக்கையில் அமர்ந்துவிட்டார் .

ஆனால் இன்றைக்கு உண்மை நிலவரம் என்னவென்றால், 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்திற்கு எதிராக குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்த்து குரல் கொடுக்கவே அஞ்சுவதற்கு காரணம் அவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகிவிடலாம் , தாக்கபட்டுவிடலாம், என்கின்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதால் தான் .

இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் (200 மில்லியனுக்கும் அதிகமான சமுதாயம் ) மோடீ அவர்களை கடுமையாக எதிர்பவர்களே ( ஆனால் மிக சொற்ப அளவிற்க்கான முஸ்லிம்கள் மாத்திரம் ஏதோ காரணத்திற்க்காக இதை ஏற்பதில்லை )

சந்தேகம் கொள்ளத்தக்க ஏதேச்சையான செயல்கள் :

குஜாரத்தில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் , முன்னர் கோத்ரா ரயில் சம்பவத்தில் 59 இந்துக்கள் கொள்ளபட்டதர்க்கான “ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத ” (ப்ராதிக்ரியா ) ஒரு பதிலடியே என்று மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர் .

இதை நானாக கற்பனை செய்து கூறவில்லை : முதலாவதாக கோத்ரா சம்பவத்தில் உண்மையில் நடைபெற்றது என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது . இரண்டாவதாக , யார் அந்த கோத்ரா சம்பவத்திற்கு காரணமோ அந்த குறிப்பிட்ட மனிதர்களை அடையாளம் கண்டு ,மிக கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் , ஆனால் இதற்காக எப்படி குஜராத்தில் வாழும் முழு முஸ்லிம் சமுதாயத்தின் மீது அரங்கேறிய அந்த கொடூர தாக்குதலை நியாய படுத்தமுடியும் ? .

குஜராத் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 9 சதவிகிதம் தான் , மீதம் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே . 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் சாரைசாரையாக படுகொலை செய்யப்பட்டனர் , வீடுகள் எரிக்கப்பட்டன , இன்னும் பல்வேறு விதமான கொடூர சம்பவங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டனர்.
2002-ஆம் ஆண் டில் முஸ்லிம்கள் இன படுகொலையை செய்யப்பட்டதை ” ஏதேச்சையான- முன் கூட்டியே திட்டம் தீட்ட படாத (ப்ராதிக்ரியா ) ” ஒரு பதிலடியே என்று இவர்கள் கூறுவது எனக்கு ஜெர்மனி நாட்டில் நவம்பர் மாதம் 1938 ஆம் அண்டு நடந்த “கிரிஸ்டல்நாக்ட்” சம்பவத்தை நினைவூட்டுகிறது . ஜெர்மனி நாட்டு விரகர் ஒருவரை யூத இளைஞன் , நாஜிக்களால் தனது குடும்பத்தை சித்ரவதை செய்பட்ட காரனத்தால் சுட்டு கொன்றுவிடுகிறான்.இதற்காக ஜெர்மனியில் இருந்த முழு யூத சமூகத்தையும் நாஜிக்கள் தாக்கினர் , படுகொலை செய்தனர் , அவர்களின் தேவாலயங்களை எரித்தனர் , கடைகளை சூறையாடினர் . ஜேர்மானிய நாஜி அரசாங்கம் இதை குறித்து ” ஏதேச்சையான – முன் கூட்டியே திட்டம் தீட்டபடாத” சம்பவம் என்றே கூறியது , ஆனால் உண்மையில் இது முன்னரே திட்டம் தீட்டபட்டு , மூர்க்கமான ஒரு கும்பலை பயன்படுத்தி நாஜி அதிகாரிகளால் அரங்கேற்றபட்டதாகும்.

வரலாற்று சான்றுகளின் படி , இந்திய நாடு ,வெளிநாடுகளிலிருந்து குடியேறிவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஒரு நாடாகும் , இதன் விளைவாக நம் நாடு பலதர பட்ட மனிதர்களையும் பெற்றது .எனவே அனைத்து வகை மனிதர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக மதச்சார்பின்மை கொள்கை உள்ளது – அதாவது அனைத்து சமூகங்களுக்கும் சரிசமமான உரிமையையும் , மரியாதையையும் வழங்குதல் என்ற கொள்கை.இந்த கொள்கையை கொண்டவர் தான் மன்னர் அக்பர் , இதை நம் மூதாதையர்களும் (பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரின் சகாக்கள் ) பின்பற்றி இந்த செக்யுலரிச (மதச்சார்பின்மை) கொள்கையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை வகுத்து தந்தனர்.இதை நாம் பின்பற்றாத வரையில் நம் நாடு ஒரு நாள் கூட அமைதியாக இருக்க முடியாது ஏனெனில் நம் நாடு பலதரப்பட்ட மதங்கள் , ஜாதிகள், மொழிகள், இன குழுக்கள் என பல வேற்றுமைகளை கொண்டுள்ள ஒரு நாடு.

ஆகவே இந்தியா இந்துக்களுக்கு மாத்திரம் உரித்தான ஒரு நாடு இல்லை . இந்நாடு முஸ்லிம்கள் , சீக்கியர்கள் , கிறித்தவர்கள் , பார்சிகள் , ஜைனர்கள் என மற்றுமுள்ள அனைத்து மக்களுக்கும் சரிசமமான அளவில் , சொந்தமான ஒரு நாடு .இங்கு இந்துக்கள் தான் முதல் தர குடிமக்களாக வாழ முடியும் , மற்றவர்கள் அனைவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர குடிமக்களாக தான் வாழ முடியும் என இல்லை .அனைவரும் முதல் தர குடிமக்களே !.குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அந்த கொடூர தாக்குதல்களும் , ஆயிரதிருக்கும் மேலான முஸ்லிம்களை கொன்று குவித்ததையும் எப்போதும் மறக்கவோ , மன்னிக்கவோ முடியாது . இதில் மோடி அவர்களுக்குள்ள தொடர்பை அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்களை வைத்து கழுவினாலும், கரையை கழுவவோ/நீக்கவோ முடியாது .

திரு மோடி அவர்களுக்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்றும் இது வரை அவரை எந்த நீதிமன்றமும் ஒரு குற்றவாளி என அறிவித்ததில்லை எனவும் மோடியின் ஆதரவாளர்கள் கூறிவருங்கின்றனர். இங்கு நான் இந்திய நீதி துறையை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை. ஆனால் மோடி அவர்களுக்கு இந்த படுகொலை சம்பவங்களில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது . குஜாரத்தில் மிக பெரிய அளவில் ,அந்த கொடூர சம்பவங்கள் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்தவர் மோடி .இதில் மோடி அவரகளுக்கு எந்த பங்கும் இருக்கவில்லை என கூறுவதை யார்தான் நம்ப முடியும் ? என்னை பொறுத்த மட்டில் என்னால் நிச்சயமாக இதை நம்ப முடியாது.

இதற்க்கு ஒரு எடுத்துகாட்டை கூறுகிறேன் : எஹ்சான் ஜாப்ரி என்பவர் அதிகம் மதிக்கப்பட கூடியவர் , ஒரு வயது முதிர்ந்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினர். இவர் குஜராத்தில் உள்ள அஹ்மதாபாத்தின் சமன்பூரா என்னும் இடத்தில வசித்து வந்தவர் . இவர் வீடு முஸ்லிம்கள் அதிகம் வாழ கூடிய குல்பர்கா வீடுகள் சமூகத்தில் இருந்தது . எஹ்சான் ஜாப்ரிக்கு நடந்த சம்பவத்தை நேரில் கண்ட இவரின் வயது முதிர்ந்த மனைவி சக்கியா ஜஃப்ரி தெரிவித்தவை இன்றைக்கும் பதிவில் உள்ளது .பிப்ரவரி 28,ம் தேதி 2002 ஆம் ஆண்டில் , வெறிபிடித்த ஒரு கும்பல் இவர் வீட்டின் பாதுகாப்பு வலயத்தை கேஸ் சிலிண்டிரை வைத்து தகர்த்தெறிந்தன. உள்ளே நுழைந்து , அங்கிருந்த எஹ்சான் ஜாப்ரி அவர்களை தர தரவென வீட்டின் வெளியே இழுத்து , கை ,கால்களை வாழால் வெட்டினர், அதற்க்கு பின் இவரை உயிருடன் எரித்தே விட்டனர் . இதே போல் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர் ,அதிகமான முஸ்லிம்களின் வீடுகளை எரித்து நாசமாக்கினர்.இத்தனைக்கும் ,சமன்புரா என்னும் இடத்திலிரிந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு காவல் நிலையம் , 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் அஹ்மதாபாத்தின் போலிஸ் கமிஷனர் அலுவலகம். முதலமைச்சருக்கு இங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்றே தெரியவில்லை என்று கூறினால் அதை எப்படி நம்புவது ?. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்திலிருந்து சக்கியா ஜஃப்ரி தனது கணவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக நீதி கிடைக்க போராடி வருகிறார் . சக்கியா ஜஃப்ரி அவர்கள் பதிவு செய்த மோடிக்கு எதிரான கிரிமினல் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவும் மறுத்து விட்டது மாவட்ட நீதிமன்றம் .(இதற்க்கு காரணம் உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது தான் ).

10 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி , சக்கியா ஜஃப்ரியின் எதிர்ப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளலாம் என கூறியுள்ளது .

இவ்வழக்கு தீர்ப்பு வழங்கபடாமல் இன்னமும் நிலுவையில் உள்ளதால் ,இவ்விஷயத்தை பற்றி இதற்க்கு மேல் நான் அதிகம் கூற விரும்பவில்லை.

மோடி அவர்கள் குஜராத்தை பெரிதும் முன்னேற்றி விட்டதாக கூறிகொள்கிறார் . ஆகவே ” முன்னேற்றம் ” என்றால் என்ன என்பதை சரி பார்ப்பது அவசியம்.என்னை பொறுத்தவரை “முன்னேற்றம் ” என்பதற்கு ஒரு பொருள் தான் இருக்கமுடியும் , அது ‘ பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது ‘ என்பது தான். பொது மக்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் உயர்த்த படாமலிருக்கும் நிலையில், பெரிய தொழில்துறை முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும் மின்சாரத்தையும் வழங்குதையெல்லாம் , முன்னேற்றம் ” என்று கூற முடியாது .

கேள்விக்கிடமான முன்னேற்றம்:

இன்றைய நிலவரப்படி , குஜராத்தில் 48 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இந்த எண்ணிக்கை ,நம் நாட்டின் சராசரி ஊட்டச்சத்து குறைவு விழுக்காட்டை காட்டிலும் அதிக விகிதமாகும் .மேலும் குஜராத் மாநிலத்தில் மழலை இறப்பு விகிதமும் அதிகம், பிரசவ பெண்களின் இறப்பு விகிதமும் அதிகம் , பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களில் ,வறுமை கோட்டில் உள்ளவர்கள் ,57 சதவிகிதம்.

திரு ராமச்சந்திரன் குஹா அவர்களின் “தி ஹிந்து ” பத்திரிக்கையில் (இந்தியாவை ஆட்சி செய்யவிருக்கும் மனிதர் , பிப்ரவரி 8 – என்ற தலைப்பில் ) வெளியிடப்பட்ட கட்டுரையில் குஜராத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது , கல்வி தரம் வீழ்ந்து வருகிறது , ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விழுக்காடு மிகவும் அதிகரித்து கொண்டே உள்ளது .குஜராத்தில் உள்ள மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமான ஆண்களின் எடை உயர விகித குறியீடு 18.5 க்கும் விட குறைவு -( நம் நாட்டின் 7 வது மிக மோசமான மாநிலம் ) என தெளிவாக கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டின் யு.என்.டீ.பீ யின் (UNDP) அறிக்கை குஜராத்தை ஒவ்வரு மாநிலத்தின் பல பரிமாண வளர்சிகளான: சுகாதாரம், கல்வி, வருமான அளவு போன்றவற்றின் பட்டியலில் 8 வது மாநிலமாக குஜராத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.

பெரிய முதலீட்டாளர்கள் , தொழிலதிபர்கள் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் செய்ய ஏதுவாக அனைத்து சூழல்களையும் உருவாக்கிதருபவர் என கூறிவருகின்றனர் , ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் , இந்தியாவில் தொழிலதிபர்கள் மாத்திரம் தான் மக்கள் என்பவர்களா ?

உண்மையிலேயே நாட்டு வளர்ச்சியை பற்றி கவலை கொள்பவர்களாக இருப்பின் , நான் இங்கு கூறிய அனைத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு இந்திய நாட்டு மக்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
அல்லது நம் நாட்டு மக்களும் ஜெர்மனி மக்கள் 1933 ஆம் ஆண்டில் இழைத்த தவறை போல தவறு செய்தவர்களாக ஆகிவிடுவர் .

நன்றி : “தி ஹிந்து” நாளிதழ்.


இந்த செய்திகள் மெய்யா? பொய்யா ? பொய் என்றால் - என்னை மனித்துவிடுங்கள். மெய் என்றால் - அறிவு உள்ளவர்கள் விளக்கம் தாருங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...