செவ்வாய், 19 ஜூன், 2012

அம்மனம் – வயது வந்தோருக்கு மட்டும்



இந்த நிர்வாணத்தினை மையமாக வைத்து சைவ சமயத்தில் புனையப்பட்ட ஒரு கதை தான் பிச்சாண்டவர் கோலம்

நீங்கள் பதினெட்டு அல்லது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் மட்டும் இதை படிக்கவும்….


பிரம்மச்சரியம் போலவே பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது இந்த அம்மனம் என்கின்ற நிர்வாணம். மனம் – அதன் எதிர்ச்சொல்லாக அம்மனம். வாழ்க்கையின் மீது பற்றில்லாமல் இருப்பதற்கான அடையாலம். நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலையில் இன்னும் சித்தர்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். அத்தகைய கொல்லிமலையின் இயற்கையை ரசிக்க ஏராளமானோர் வருகின்றனர். அப்படி வரும் சில தொழிலதிபர்கள் அங்கிருக்கும் குகைகளில் தியானம், தவம் செய்வதாகவும் சிலர் ஆடையின்றி இருப்பதாகவும் ஒரு இதழ் தகவல் வெளியிட்டிருந்தது.

குழந்தையின் நிர்வாணத்தை கிண்டல் செய்கின்ற பலர். பெரியவர்களின் நிர்வாணத்தினை புகழ்ந்து சொல்கின்றார்கள். காரணம் குழந்தைகள் வெட்கத்தையோ, அவமானத்தையோ பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை ஆனால் வளர்ந்த ஒரு மனிதனுக்கு இவை இரண்டும் இல்லை என்பது வியப்பு தானே. அதை தான் சாதுக்களும், ஜென் குருக்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.


சமணர்கள் நிர்வாணமாக வந்து மக்களிடையே அடிவாங்கி ஓடிப்போன சம்பவங்கள் கூட உண்டு. எனவே அவர்கள் காட்டுப்பகுடியிலும், மலைப்பகுதுயிலும் குடியேரிவிட்ட்னர். கும்பமேளாவின் குளிப்பதற்கு மட்டும் இவர்கள் சிலர் கங்கைக்கு வருவதுண்டு. அப்போது தான் இவர்களின் தரிசனம் மக்களுக்கு கிடைக்கும்.
நிர்வாணமாக இருக்க வெளிநாடுகளில் தனியாக கடற்கரைகளை ஒதுக்கி இருக்கின்றார்கள். ஆண், பெண் பாகுபாடின்றி எல்லோரும் நிர்வாணமாய் திரிகின்ற உலகம் அது. ஆடை என்பது பிறருக்காக நாம் நம் உடல் மேல் போட்டிருக்கும் வேலி. அந்த வேலி தகர்க்கப்படும் போது உணரப்படும் சுகந்திரத்திற்காகவே இப்படி.

நிர்வாணப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்பட கண்காட்சிக்கு வருகின்ற அனைவரும் நிர்வாணமாக மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். உணர்ந்தவர்களுக்கு மட்டுமே உன்னதம் தெரியும் என்பது அவர்கள் கோட்பாடு. மார்பை மூடாமல் இருக்கும் பழங்குடிகள் பல நாடுகளில் உண்டு. இந்தியாவில் கூட களபிரர்கள் ஆட்சிக்கு முன் அப்படி இருந்த்தாக தகவல்கள் உண்டு.
இயக்குனர் சங்கரின் ஜீன்ஸ் படத்தில் கவிப்பேரசுவின் பாடல் ஒன்றில் “நிர்வாண மீன்கள் போல நீந்தலாம்” என்ற வரியொன்று வரும். இதுபோல பலருக்கும் நீர்நிலைகளில் நிர்வாணமாக இருக்க ஆசை உண்டு. யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற மனோதெகிரியம் வந்தால் அம்மனமாக மாறிவிடுவார்கள். ஆனால் பலரும் பார்க்க இப்படி செய்பவர்களை வக்கிர எண்ணம் உள்ளவர்களாக அடையலாப்படுத்தி விடுகின்றோம்.
ஒரு இடத்தில் பெரும்பான்மை மிக்கவர்கள் எதை செய்கின்றார்களோ, அவர்களின் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கின்றதோ அதுவே நியாயம் ஆகிறது. நிர்வாணச்சாமியார்கள் இருக்கும் இடத்தில் கோமணம் கட்டியவன் கூட புழுவைப்போல இகழ்ச்சியாக தான் பார்க்கப்படுவான்.
புகழ் பெற்ற நடிகைகள், பாப் பாடகிகள் என பல துறையை சார்ந்த பெண்களும் தங்களின் நிர்வாண படங்களை நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றார்கள். இப்படி நிர்வாணப் படங்களை வெளியிட பல பத்திரிக்கைகள் இருக்கின்றன. பமிலா ஆண்டர்சன், ஏஞ்சலீன ஜூலி, பிரிட்டனி ஸ்பியஸ் என்ற வரிசையில் இறுதியாக இணைந்திருப்பவர்கள் ஏராளம்.
இந்த நிர்வாணத்தினை மையமாக வைத்து சைவ சமயத்தில் புனையப்பட்ட ஒரு கதை தான் பிச்சாண்டவர் கோலம். சிவன் நிர்வாணமாய் இருப்பார், அவரைச்சுற்றி முனி பத்தினிகள் இருப்பார்கள். ஆணவம் அழித்திட வந்த ஒரு அவதாரமான சிவன் இருப்பதைப் பற்றி எடுத்துக் கூறிடும் கதை அது.
உடலினை மதித்து அதில் வரைந்திடும் கலைக்கு வெளிநாடுகளில் இப்போது மவுசு அதிகம். நிர்வாண உடலில் அந்த நிர்வாணத்தை ரசிக்கும் மக்களுக்கு நிர்வாண ஓவியங்களிலும் கவணம் அதிகம். இந்து மத கடவுள்கள் நிர்வாணமாக தான் இருந்தன என்று சிலர் சொல்வதுண்டு. அவர்களின் கூற்றுப்படி மகாராணி விக்டோரியா காலத்தில் ராஜா ரவிவர்மா பெண் தெய்வங்களுக்கு அதிக ஆடை கொடுத்து வரைந்த்தாக சொல்லுகின்றார்கள். பல கோவில்களில் பாவைகள் திறந்த மார்புடம் முலைகளை காட்டியபடி இருப்பது கலையும் பண்பாடும் இணைந்திருந்த பழைய வரலாறே.

நிர்வாணம் ரசிக்கும் மக்களுக்கு வரமாகவும், மற்றவர்களுக்கு அசிங்கமாகவும் காலம்காலமாக இருந்து கொண்டே வருகின்றது.

ந்த செய்திகள் மெய்யா? பொய்யா ?
பொய் என்றால் - என்னை மனித்துவிடுங்கள்.
மெய் என்றால் -  அறிவு உள்ளவர்கள் விளக்கம் தாருங்கள் .


1 கருத்து:

  1. மனிதன் உடல் மறைத்த
    பின்தான்..!!
    உலக மக்கள் அவன் பார்வையில்..!!
    ஆபாசம் ஆனார்கள்..!!
    ஆபாசத்தின் விளக்கம் உணர்தான்..!!
    சிறிது விலகிய
    ஆடைகூட..!!
    ஆபாசமானது ஆனால்தான்..!!

    பதிலளிநீக்கு

உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...