புதன், 18 ஜனவரி, 2012


புராச்சி  திருமணம்   என்றால்.




பிரேஸில் நகரொன்றில் திருமண வைபவத்தின்போது உள்ளாடையின்றி தேவலாயத்திற்கு வரும் மணமகள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். இதற்கு தடை விதிப்பதற்காக புதிய சட்டமொன்றை இயற்றும் யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார். பிரேஸில் தென் கிழக்கு நகரமான விலா வெல்ஹா நகரில் மேற்படி மணமகள்களின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதாக ஒஸியாஸ் ஸிஸி எனும் மேற்படி உறுப்பினர் கூறியுள்ளார்.
திருமணம் செய்துக்கொள்ளும் போது உள்ளாடை இன்றி தேவலாயத்திற்கு வந்தால் தமது திருமண வாழ்க்கை நீடிப்பதாக மேற்படி மணமகள்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் இதனால் திருமணம் செய்துக்கொள்ளும் பெண்கள் இவ்வழக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர் எனவும் அவர் கூறுகிறார்.
எனவே இனிவரும் காலங்களில் திருமணம் செய்து கொள்வதற்காக தேவலாயத்திற்கு வரும் மணமகள்கள் உள்ளாடை அணிந்து வருவது கட்டயமாக்கும் வகையிலான சட்டம் இயற்றும் யோசனையை பிரேஸிலின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மேற்படி உறுப்பினர் ஒஸியாஸ் ஸிஸி முன்வைத்துள்ளார்.

உள்ளாடை அணியாமல் திருமண வைபவத்தில் கலந்துகொண்டால், தமது திருமண வாழ்க்கை நீடிக்கும் என பெரும் எண்ணிக்கையான பெண்கள் நம்புகின்றனர். எவரும் அவர்கள் விருப்பபடி திருமணத்தை செய்துக்கொள்ளாலாம். ஆனால் அவர்கள் திருமணம் செய்துக்கொள்வதற்காக உள்நுழையும் புனித வணக்கஸ்தலங்களுக்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும். மற்றும் உள்ளாடைகளின்றி வருவது மதிப்பளிப்பதாகாது’ என ஒஸியாஸ் ஸிஸி கூறியுள்ளார்.
தான் முன்வைத்துள்ள சட்டமூல யோசனையின்படி, மணமகளின் மேலாடையின் கழுத்துப் பகுதி எந்தளவு தாழ்வாக இருக்கலாம் என்பதையும் வரையறை செய்யும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திருமண வைபவத்தை நடத்தும் பாதிரியார்கள் சங்கடத்திற்குள்ளாவதிலிருந்து தவிர்க்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
மணமகளின் ஆடை குறித்து சோதிப்பது கடினம்தான். எனினும் அறிவுறுத்தல் பிரசாரங்களை நடத்துவதன் மூலம் புனிதத் தலங்களின் புனிதத்தை பேண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மேற்படி நகரில் திருமணம் செய்துவைக்கும் உள்ளூர் மதகுரு ஒருவர் இந்த யோசனை அபத்தமாக இருப்பதாக விமர்சித்துள்ளார். மணமகள் உள்ளாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிவதற்கு பொலிஸாரை வரவழைப்பது அபத்தமானது என எண்ணுகிறேன்’ என இனோச் டி காஸ்ட்ரோ எனும் பாதிரியார் தெரிவித்துள்ளார்.




                                                                 இந்த பெண்களைப் பார்த்து . 



                                         இந்த பெண் சொல்கிறார் அவள் பழமை வாதி என்று
                                                        ஆனால் இந்த பெண்ணையும் பார்த்து .,? 

 

                                          இந்த பெண் சொல்கிறார் அவள் நவீன பெண்  இல்லை என்று

                              





இப்போது நீங்கள் சொல்லுகள் யார் ?  நாகரீகம்  உள்ளவர்கள் என்று . 
(அனால் இந்த பெண்களின் நிலையில் உங்களின் "சகோதரிகளை"வைத்துப்பாருங்கள்.)
உங்களின் கருத்துக்களையும் எழுதுங்கள்.

 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...