திங்கள், 30 ஜனவரி, 2012

கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!


கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!





கிருத்துவத்தில் பெண்களின் நிலை: கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் அதிகமாகவே அடக்கியாளப்பட்டார்கள். ஆண்டவனால் படைக்கப் பட்ட ஆதாம்-ஏவாள் அண்ணன்-தங்கை அல்லது அக்காள்-தம்பி என்ற உறவில் இருந்தும் எப்படி புணைந்து குழந்தைகள் பெற்றெடுத்து மனிதகுலத்தை விருத்தியடையச் செய்தார்கள் என்ற முரண்பாட்டைப் பற்றி கிருத்துவர்கள் கவலைப்படுவதில்லை. பகுத்தறிவாளிகளும் அதனைப் பற்றி விவாதிப்பதில்லை. “ஆதாம்-ஏவாள்” கருத்துருவாக்கம், பெண்ணின் தோற்றம் அத்தகைய அடக்கியாளும் தமைக்கு வழிவகுத்தது.

மேரியின் புனிதமான குழந்தை பெற்றெடுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும்: ஏசுகிருஸ்து மேரிக்கு ஒரு ஆண்தொடர்பு இல்லாமல் குழந்தை பிறந்தது என்று மத்ததின் அடிப்படை கொள்கையாக இருந்து, அதனை கிருத்துவர்கள் எல்லோருமே நம்பியாக / ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஜோஸப் என்ற கணவன் இருந்தான், அவன் ஏசுகிருஸ்துவின் தகப்பன் என்று ஏற்றுகொள்ள மறுத்தனர் அல்லது மறுக்க / மறக்கப் பட்டது. அதனால், பெண்கள் பூட்டியே வைக்கப் பட்டார்கள். இது அடுத்த பெண்ணடிமையின் நிலை. முதலாம் ஆதாமின் பாவ,ம், இவ்வாறு இரண்டாவது ஆதாமின் மூலமுன் தொடர்கிறது போலும்!




தேவரடியார்களான கன்னியாஸ்திரிக்கள் – ஏசுவின் மனைவிகள்; கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் பெண்கள் அனைவருமே ஆண்டவனுக்கு சொந்தம். அவர்கள் கர்த்தருக்காக/ கர்த்தருக்குப் படைக்க / அர்பணிக்கப் பட்டவர்கள்[1]. கன்னியாஸ்திரிக்களாகும் பெண்களுக்கு ஏசுவுடன் திருமணம் செய்விக்கப் படுகிறது[2]. விரல்களில் மோதிரம் அணிவிக்கப் படுகிறது[3]. அதனால் அவர்கள் “கன்னியாஸ்திரிக்கள்” என்ற நிலையில் இருந்து தங்களது கற்பைக் காத்துப் பேணி சேவைசெய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடிய வேண்டும். அவர்கள் “தேவரடியார்கள்” என்று சொல்லப்பட்டவர்களை விட மிகவும் மோசமாக நடத்தப் பட்டார்கள் / படுகிறார்கள். இந்த கன்னியாஸ்திரிக்களாகும் விழாவைப் பற்றி / சடங்குகளைப் பற்றி / மந்திரங்களைப் பற்றி, எந்த ஆராய்ச்சியாளனும், சரித்திர ஆசிரியனும், பகுத்தறிவுவாதியும் விவாதித்ததில்லை!

கிருத்துவ வார்த்தைகளிலேயே பொருள் பொறுந்தியுள்ளதை கவனிக்க வேண்டும்: சர்ச், ஆபெட், அப்பே, செமினரி, கான்வென்ட், ஆஸ்பத்திரி என்று சேர்ந்துதான் இருக்கும்.
சர்ச் = மாதாகோவில், கிருத்துவர்களின் வழிபடும் இடம்,
ஆபெட் = மதகுமார்கள் வசிக்குமிடம்,
செமினரி = மாணவர்கள் தங்கி படிக்குமிடம்,
கான்வென்ட் = குழந்தைகள் படிக்குமிடம், தங்கி படிக்குமிடம்,
நன்னெரி = கன்னியாஸ்திரிக்கள் வசிக்குமிடம்
ஆஸ்பத்திரி = குழந்தைகள் பிறக்குமிடம், கிருத்துவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பிடம்.

கன்னித்தன்மை / கற்பைக் காக்கும் இடைக்கச்சை: போப்புகள், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள், மற்ற குருமார்கள் பிரமச்சரியத்தைக் காத்து வாழ வேண்டும். கன்னியாஸ்திரிக்களும் கற்போடு வாழ வேண்டும். ஆனால் முன்னவர்கள் பின்னவர்களிடம் உறவுகொண்டு பிரச்சினைகள் வர ஆரம்பித்தபோது, கன்னியாஸ்திரிக்களுக்கு “கர்டில்” என்ற “பெல்ட்” அணிவிக்க ஆரம்பித்தார்கள்[4]. அது இக்கால ஜட்டி / பேன்டி / நேப்கின் போன்றது. இடுப்பைச் சுற்றி பெண்குறியை மறைக்கும் உடையாகும்[5]. அதற்கு பூட்டு-சாவி இருந்தன[6]. மதகுருமார்கள் இடுப்புக்கச்சையை அணிவித்து சாவிகளை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்[7]. இடைக்காலத்திற்குப் பிறகு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன, குறைய ஆரம்பித்தன. பொரடஸ்டென்ட் (கத்தோலிக்க எதிர்ப்பு) கிருத்துவம் பிரமச்சரியத்தை கட்டாயமாக்கவில்லை, அதாவது மதகுருமார்கள் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதனால், கன்னியாஸ்திரிக்கள் ஓரளவிற்குத் தப்பித்தார்கள்!

கருத்தடை மாத்திரிகைகள் / சாதனங்கள்: இருப்பினும் கன்னியாஸ்திரிக்களுடன் உறவு ஏற்படும்போது, கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமுற்று குழந்தைகளைப் பெற்றெடுப்பதுண்டு. கத்தோலிக்கக் கிருத்துவத்தைப் பொறுத்த வரைக்கும் “அபார்ஷன்” செய்யக் கூடாது. அப்படி செய்திருந்தால் “ஏசுகிருஸ்துவே” பிறந்திருக்க முடியாது. அதனால் தான் கிருத்துவம் ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு, கருத்தடை சாதனங்கள் முதலியவற்றை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், மறுபுறம் கன்னியாஸ்திரிக்கள் கர்ப்பமாகாமல் இருக்க இப்பொழுது கருத்தடை மாத்திரிகைகளை சாப்பிடலாம் என்று பரிந்துரை செய்கிறது. “எய்ட்ஸ்” விழிப்புணர்வு போன்று “பிங்க்” நிறத்தில், “பிங்க் பைபிளையும்”[8] வெளியிட்டாகிவிட்டது! கத்தோலிக்கப் பத்திரிக்கைகளும் அதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தாகிவிட்டது[9]. உலகமுழுவதும் ஒரு லட்சம் கன்னியாஸ்திரிக்கள் இருக்கிறர்களாம். அவர்கள், பிரம்மச்சரியத்தைக் காப்பதால், மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கு உள்ளாகிறர்களாம். அதனால், அவற்றிலிருந்து தப்பிக்க கர்ப்பத்தடை மாத்திரிகைகள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்[10]. கத்தோலிக்க சர்ச் இதற்கு அனுமதியளித்துள்ளதாம்[11]. ஒருவேளை இவ்வாறு செயற்கை முறை தேவையில்லை என்றால், உண்மையாகவே உடலுறவு கொண்டால் அப்பிரச்சினை தீர்ந்து விடுமே, அதாவது, பெண்களை அடக்காமல், இயற்கை ரீதியில் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்குமே?
வேதபிரகாஷ்

இது மெய்யா ? பொய்யா? யோசி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...