புதன், 15 பிப்ரவரி, 2012

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் ரத்த சாட்சி பழனிபாபா!



இன்று (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா வீரமரணம் அடைந்த  நாள். அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டியவர்  பழனிபாபா இவரது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.


இவர் கல்லூரி படிப்பை முடித்து முதுகலை மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான மேடைகளில்  புயலென அழகான அற்புதமான புள்ளி விபரங்களுடன் பேசி பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்  எழுச்சிக்கு வித்திட்டார். பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும்.

ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர்.  இந்து பாஸிஸம், தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று' என்ற போர்வையில் தலையெடுத்த போது அதற்கு தக்கபதில் அளித்தார்.

ராமகோபாலன் போன்ற ஹிந்துத்துவா  பயங்கரவாதிகள்  ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க கீழ்த்தரமான பிரசுரங்களையும், புத்தகங்களையும் வெளியிட்டு வந்தனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ராமகோபாலன் வகைறாக்கள் கீழ்த்தரமான மேடை பேச்சுக்கள் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை கெடுத்து மதகலவரங்களை உண்டாக்கும் விதத்தில் பேசிவந்தனர்.  அதற்க்கு பாபா ஆங்கிலத்தில் அரசியல் நிர்ணயச்சட்டம்; வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார்.

இவருடைய பேச்சுக்கள் ஹிந்து மக்களையும்  சிந்திக்க வைத்தது.
பழனிபாபாவின் பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள். இவரது பேச்சுக்களால் பயங்கரவாதி ராமகோபாலனின் மதவெறி பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாமல் போனது.  தங்களது மதவெறி பிரச்சாரத்துக்கு தொடர்ந்து பழனி பாபா இடையூறாக இருப்பதை கண்ட ஹிந்து பயங்கரவாதிகள் அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். இதை திறம்பட செய்து முடிக்கும் பணி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். அதன் உறுப்பினர்களுக்கு சாஹா என்னும் கடுமையான உடல் மற்றும் ஆயுத பயிற்ச்சியும் அத்தோடு துப்பாக்கி சுடும் பயிற்ச்சியும் கொடுக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தங்கள் இயக்கத்தின் கொலைகாரர்களை தயாரிப்பதற்கு என்றே பயிற்சி பாசறைகளை நடத்துகிறது. அதில் இவர்கள் மாடுகளை கத்தியால் குத்தி வெட்டி கொல்வார்கள். அப்போதுதான் இரத்தத்தின் மீது உள்ள பயம் போகும் என்று.

இதுமட்டும் அல்ல ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு சிறந்த உளவுத்துறையையும் தன்னகத்தே கொண்டது. இவர்களது உளவுதுறையை இஸ்ரேலின் மொசாதுக்கு ஒப்பிடுகிறார்கள். அதன் அடிப்படையில் பழனி பாபாவை கொலை செய்யும் திட்டம் தமிழக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் தீட்டப்பட்டு கேரளத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பழனிபாபா வழக்கமாக போகும் இடம், அவரது அன்றாட அலுவல்கள் குறித்து தமிழக ஆர்.எஸ்.எஸ். உளவுத்துறையை சேர்ந்தவர்களால் ஒரு தகவல் எடுக்கப்பட்டு அது கேரளத்து ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தங்களுக்கு கொடுக்கப்பட்ட உளவு தகவல்கள் அடிப்படையில் கேரளத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் காரில் தமிழகம் வந்து சந்தர்பத்திர்க்காக காத்திருந்தனர். 1997 ஜனவரி 28 ந் தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து விட்டு அவரை 7:30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் 9:30 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து, தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார்.

அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி ஒருவன்  கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான் பாபாவின் குடல் சரிந்தது. உடனே மற்றவர்களும் வந்து அவரை  கழுத்திலும், முகத்திலுமாக 18 வெட்டுகள் வெட்டினார்கள். அவர் அந்த இடத்திலேயே வீரமரணம் அடைந்தார். அவரை கொன்ற ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். பழனி பாபாவின் படுகொலை ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கத்தின் கோர முகத்தையும் அவர்களது அண்டை மாநில தொடர்புகளையும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்துத்துவாவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார்.
பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின் வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதி என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் களாக உறவு சொல்லி பழகிவந்த ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வெட்டு வைக்கும் வேலையை ஹிந்துத்துவா மீண்டும் மீண்டும் தமிழகத்தில் செய்து வருகிறது. வட இந்தியாவில் இவர்களது சூழ்ச்சிக்கு மக்கள் பலியானாலும் தமிழகம் இன்றுவரை அதில் இருந்து தப்பித்தே வந்துள்ளது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் இன்னுயிரை கொடுத்த தியாகி பழனி பாபா அவர்களை தமிழ் மக்கள் ஜாதி மதங்களை கடந்து மதிக்கிறார்கள். 
 நன்றி : http://hinduextremistworld.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...