எரியும் கற்பூரத்தை சாப்பிடுவது, தீ மிதிப்பது எப்படி ?
சிலர் கோயில்கள்ள எரியற கற்பூரத்தை அப்படியே வாயில் போட்டுவிட்டு கண்ணை மூடியபடி சிறிது நேரம் நிற்பார்கள்..
அப்பிடியே “அம்மாளாச்சி தாயே..” “வைரவக்கிழவா..“ “கதிர்காமக் கந்தா..“
போன்ற ஏதாவது ஒன்றை எட்டு ஊருக்கு கேட்கும்படி மெதுவாக கத்திவிட்டு
பின் தம்மை சுற்றியுள்ள மற்ற பக்தர்களை பார்ப்பார்கள்..
சந்திரனில் காலடி வைக்கும் போது நீலாம்ஸ்ராங் முகத்தில் என்ன றியாக்ஸன் இருந்திருக்குமோ.. அதே பெருமை இவர்கள் முகத்தில் தெரியும்..
எரியும் கற்பூரத்தை வாயில் போட்டு சாப்பிட்டால் தான் கூட அருள் தருவேன் என்று கடவுள்கள் யாரும் சொல்லியிருப்பார்களோ!!
இது
கடவுளின் ஆசி பெற்றவர்களால் மட்டும் தான் முடியுமா?
நாம பண்ணினா
தெய்வ குத்தமாயி சாமி கண்ண குத்திடுமா? இல்லைனா நாக்கு சுட்டுடுமா?
ஒரு கற்பூரத்தை எடுத்து கைல வைச்சி கொளுத்திட்டு அப்டியே நெருப்புபோட வாய்ல போட்டு சாப்பிடலாம்..
கையையும் சுடாது..
நாக்கையும் ஒண்ணும் பண்ணாது..
ஏன்னா..
நம்ப தோல் வெப்பத்தை உணர 3 நொடி தாமதமாகும்..
அதுக்கிடேல கையில எரிஞ்விட்டிருக்கிற கற்பூரத்தை வாய்ல போட்டுடுவோம்..
வாய்ல கற்பூரம் எரிஞ்ச படி விழுந்ததும் நாம வாய மூடிக்குவோம்..
இதனால கற்பூரம் எரியறதுக்க தேவையான O2 (ஒட்சிசன்)
தடைபட்டு விடுவாதால் கற்பூரம் வாய்க்குள் சென்றதுமே அணைந்து விடுகிறது..
இவளவு தான் மேட்டர்..
பூ மிதிப்பது அல்லது தீ மிதிப்பது எனப்படும் தீ மீது நடப்பது நமக்கும் சாத்தியப்படுமா? என்பது பற்றி பார்ப்போம்..
கடவுள் நேர்த்திகளில் பலி கொடுத்தலை அடுத்து பிபலமானது தீ மிதித்தல் ஆகும்..
உடம்பில் மஞசள் நீரை ஊற்றியபடி.. அரோகரா ஒலி வானைப்பிளக்க..
மேளதாளம் முழங்க தீ மிதிப்பவர்கள் நெருப்பை தாண்டிய படி செல்வார்..
பின் அவரை பேட்டி கண்டால்.. தனக்கு இறைவன் அருளால் தீ ஒன்றும் செய்யவில்லை
என்றும்.. உண்மையான பக்தி இல்லாதவர்களுக்கு கால் வெந்துவிடும் என்றும்
அதற்கு 2 உதாரணங்களும் கூறுவார்..
இது கடவுளின் ஆசி பெற்றவர்களால் மட்டும் தான் முடியுமா?
நாம பண்ணினா
தெய்வ குத்தமாயி சாமி கண்ண குத்திடுமா? இல்லைனா கால் சுட்டுடுமா?
8அடி நீளம் 2 அடி ஆழம் 1/2அடி அகலம் உள்ள குழி ஒன்றை வெட்ட வேண்டும்..
நிறைய விறகுகளை குவியலாக அடுக்கி பற்ற வைத்து நன்றாக எரியவிட வேண்டும்..
நெருப்பு தணல்கள் கட்டி கட்டியாக இருக்கும் போதே குழி முழுவதும் நன்றாக பரவிவிட வேண்டும்..
அவ்வப்போது உப்புதூளை கொட்டி விசிறி விட வேண்டும்..
கட்டாயம் நெருப்பு தணல்கள் கனண்று இருக்க வேண்டும் முக்கியமாக சாம்பல் இருக்கவே கூடாது..
தீ மிதிக்கும் முன்பு கால்களை தண்ணீரில் அவம்பி விட்டு நெருப்பு மீது வேகமாக நடக்க வேண்டும்..
பெண்களாக இருந்தால் காலில் அணிகலன்கள் இருக்கவே கூடாது..
யார் ஆசைப்பட்டாலும் தீ மீது நடக்கலாம் கால் சுடவே சுடாது..
எச்சரிககை:
ஏற்கனவே பயிற்சி பெற்ற ஒருவர் முன்னிலையில் அவரின் வழிகாட்டலோடு செய்து பார்க்கவேண்டும்..
எப்படி இது சாத்தியப்படுகிறது..?
காலிலுள்ள தோல் வெப்பத்தை உணர 3 நொடிகள் எடுத்துக்கொள்ளும் அதற்குள் கால்களை இடம்மாற்றி நடக்கும் போது..
தீ மிதிப்பது எல்லோராலும் சாத்தியப்படுகிறது..
இந்த செய்திகள் மெய்யா? பொய்யா ?
பொய் என்றால் - என்னை மனித்துவிடுங்கள்.
மெய் என்றால் - அறிவு உள்ளவர்கள் விளக்கம் தாருங்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...