வியாழன், 20 டிசம்பர், 2012

நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன்

 டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை


கற்பழித்தவர்களுக்கு இஸ்லாம் வழங்கும் தீர்ப்பு.





கற்பழித்தவர்களுக்கு எங்கள் பாரதத்தில் வழங்கப்படும் தீர்ப்பு.!
 

டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோ தெரபி படித்து வரும் 23 வயது மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். தன் நண்பருடன் தெற்கு டெல்லியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த மாணவிக்கு இந்த கொடூரம் நேர்ந்தது.

வீடு திரும்ப ஆட்டோ கிடைக்காததால் அந்த மாணவியும், அவரது நண்பரும் அந்த வழியாக வந்த ஒரு பள்ளிக்கூட பஸ்சை நிறுத்தி ஏறினார்கள். அப்போது அந்த பஸ்சில் 6 இளைஞர்கள் மது போதையுடன் இருந்தனர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரை இரும்பு கம்பியால் தாக்கி ஓரம் கட்டி விட்டு மாணவியை கற்பழித்தனர். அதன் பிறகு அந்த 6 பேரும் மாணவியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவரையும் அவரது நண்பரையும் ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விட்டு சென்று விட்டனர்.

சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை போலீசார் மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து திங்கட்கிழமை வீடு திரும்பி விட்டார். ஆனால் மாணவி கற்பழிக்கப்பட்டதோடு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

போதையில் இருந்த காம கொடூரர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் அந்த மாணவி குடல் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. திங்கட்கிழமை அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் நேற்று திடீரென அந்த மாணவியின் உடல் உள் உறுப்புக்களை அழுகச் செய்யும் தொற்று பரவியது. இதனால் மாணவியின் உடல் உறுப்புகளின் செயல்பாடு முடங்கியது.

நேற்றிரவு மாணவி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி உடல் உள் உறுப்புகளில் ரத்த கசிவு நீடிப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக மாணவிக்கு சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் இரண்டு அறுவை சிகிச்சைக்களை மேற்கொண்டனர். என்றாலும் மாணவி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மாணவியின் உறவினர்கள் மருத்துவ மனையில் சோகத்துடன் உள்ளனர். இதற்கிடயே மாணவியை கற்பழித்து ஈவு, இரக்கமின்றி தாக்கியவர்களை பிடிக்க டெல்லி போலீசார் மேற்கொண்ட மின்னல் வேக வேட்டைக்கு பயன் கிடைத்தது. குற்றவாளிகள் 6 பேரும் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. ராம்சிங், பஸ் டிரைவர்.

2. முருகேஷ். இவன் ராம் சிங்கின் தம்பி. ஒரு ஜிம்மில் உதவியாளராக உள்ளான்.

3. விஜய் சர்மா, பழ வியாபாரி.

4. பவன்குப்தா, உதவியாளர்.

அக்ஷய் தாக்கூர், ராஜு ஆகிய 2 வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க டெல்லி தனிப்படை போலீசார் பீகார், ராஜஸ் தான் மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகள் 6 பேரும் டெல்லியில் ஆர்.கே.புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் 6 பேர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது.

குற்றவாளிகள் 6 பேர் மீதும் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 377 (செக்ஸ் சித்ரவதை) மற்றும் 365, 376 (கடத்தி கற்பழித்தல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சில கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்தி நேற்று பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகளை உயிருடன் விடக்கூடாது என்று நாடெங்கும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் தீவிரமாகியுள்ளன.

மாணவி கற்பழிக்கப்பட்டது பற்றி 2 வாரத்துக்குள் அறிக்கை தரும்படி டெல்லி மாநில அரசை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய உள்துறை புதிய நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மாணவி கற்பழிப்பு குறித்து தினமும் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதற்கு ஏற்ப டெல்லி போலீசாரும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் கூறுகையில், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட நாங்கள் பரிந்துரை செய்யப் போகிறோம் என்றார். எனவே மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பது உறுதியாகி உள்ளது.

மேலும்

சப்தர்ஜங் மருத்துவ மனையில் அந்த மாணவிக்கு இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று அந்த மாணவியின் சிறுகுடல் பகுதியில் ஆபரேஷன் நடந்தது. கிருமி தொற்று ஏற்பட்டிருந்த சிறு குடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. 150 முதல் 200 செ.மீ நீளத்துக்கு சிறுகுடல் இருந்தால் தான் உணவு ஜீரணமாகி ஒருவர் உயிர் வாழ முடியும். மாணவியின் சிறுகுடல் கணிசமாக அகற்றப்பட்டு விட்டதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. என்றாலும் மாணவியைகாப்பாற்றி விட முடியும் என்று சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
:-
இன்று மாலைக்குள் மாணவிக்கு கொடுத்து வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி விட்டு அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடையிடையே மயக்கம் தெளிந்து நினைவு வருகிறது.தனக்கு நேர்ந்துள்ள கொடூரத்தை நினைத்து கதறி அழும் அந்த மாணவியால் பேச முடியவில்லை.
:-
மெல்ல முனங்கியபடி உள்ளார். நேற்றிரவு சற்று தெம்பான அவர் பேனா, பேப்பர் வாங்கி எழுதி காட்டினார். அதில் அவர் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன் என்று எழுதினார். அதைப்பார்த்து மாணவியின் பெற்றோர், சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கண்ணீர் விட்டனர். உயிருக்குப் போராடி வரும் நிலையிலும் அந்த மாணவி தைரியமாக சிகிச்சைகளை எதிர்கொள்வதாக டாக்டர் தெரிவித்தார்.
:-
இதற்கிடையே மாணவியை சிதைத்த 6 கயவர்களில் இதுவரை 5 பேர் கைதாகியுள்ளனர். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குற்றவாளிகளில் 2 பேர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்ட நிலையில் நேற்று ஒருவர் கைதாகியுள்ளார். மேலும் ஒருவரை பிடிக்க பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்த செய்திகள் மெய்யா? பொய்யா ? பொய் என்றால் - என்னை மனித்துவிடுங்கள். மெய் என்றால் - அறிவு உள்ளவர்கள் விளக்கம் தாருங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...